புத்தாண்டு 2024: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா, எலியட்ஸ் இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

புத்தாண்டு 2024
புத்தாண்டு 2024

வருகின்ற ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி மெரினா கடற்கரை உட்புறச் சாலையில் உள்ள அனைத்து வழிகளும் டிசம்பர் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் சாலை தடுப்புகள் வைக்கப்பட்டு வாகனங்கள் கடற்கரை உள்ளே நுழையாமல் தடை செய்யப்படும்.

காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி திங்கள் கிழமை காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டது. அதாவது காமராஜர் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, அயோத்தி நகர், பெசன்ட் சாலை பாரதி சாலை, சுங்குவார் தெரு, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்த சாலை சந்திப்புகளில் வாகனங்கள் நுழையாமல் தடுக்கப்படும்.

பாரி முனையில் இருந்து காமராஜர் சாலைக்கு வாகனங்கள் வர ரிசர்வ் வங்கி, வடக்கு கோட்டை சுவர், முத்துசாமி சாலை வாலாஜா சந்திப்பு. அண்ணா சாலை வழியாக வந்து சேரலாம். அதேபோல், அடையாறில் இருந்து காமராஜர் சாலைக்கு வாகனங்கள் வர கிரீன்வேஸ், தெற்கு கால்வாய், மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் இரண்டாவது சாலை, ஆர். கே. மடம், மயிலாப்பூர் சாலைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ALSO READ : Happy New Year 2024 Wishes in Tamil – புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி. எம். சாலையில் திருப்பி விடப்பட்டு ஆர். கே. மடம், லஸ் சந்திப்பு, மந்தைவெளி, தெற்கு கால்வாய் வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை, கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம். வாகனப்போக்குவரத்து தெற்கு கால்வாய் கரையிலிருந்து கலங்கரைவிளக்கம் சந்திப்பு வரை அனுமதிக்கப்படாது. அன்று இரவு 8 மணி முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து ராஜாஜி சாலை, வாலாஜா போர் நினைவிடம் கோடி மரச் சாலை வரை வாகனப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை.

அரசு பேருந்துகள் அடையாறிலிருந்து பாரிமுனைக்கு செல்ல தெற்கு கால்வாய் கரை, மந்தவெளி வி.கே. ஐயர் சாலை, புனித மேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை , கதீட்ரல் சாலை, அண்ணா சாலையை பயன்படுத்தலாம். பாரிமுனையில் இருந்து அடையார் நோக்கி வாகனங்கள் வர ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, என்.எஃப்.எஸ். சாலை, முத்துசாமி சாலை, அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம், கதீட்ரல் சாலை, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு, மந்தைவெளி, தெற்கு கால்வாய் கரை வழியாக பயணிக்கலாம்.

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6 வது அவென்யுவில் வரும் 31 ஆம் தேதி இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. பெசன்ட்நகர் 6 வது அவென்யு இணைப்பு சாலைகளான 5 மற்றும் 4 மற்றும் 3 ஆவது அவென்யு பிரதான சாலைகளிலும், 16 குறுக்கு தெரு பகுதிகளிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். மகாத்மா காந்தி சாலை 7 வது அவென்யுவில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத்துக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படாது என தெரிவித்துள்ளது.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top