சுப்ரீம் கோர்டில் இன்று புதிய செயலி அறிமுகம்!

0
44

உச்சநீதிமன்றத்தில் இன்று புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்த புதிய செயலியின் பெயர் ‘சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.0’ ஆகும். இந்த செயலியை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், இந்த புதிய செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்னும் ஒரு சில நாட்களில் ஆப்பிள்/ ஐஒஎஸ் பயனார்களுக்கும் இந்த புதிய செயலி கிடைக்கும்.

இந்த சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.0 செயலி மூலம் அரசு சார்ந்த துறைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் உள்ளிட்டவை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்களின் சட்ட அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ள முடியும். சட்ட அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் சட்ட அதிகாரிகள் தங்கள் வழக்குகளின் நிலை, உத்தரவு, தீர்ப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை ஆகியவற்றை இந்த செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here