தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படுபவர் நடிகை நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் திருமணம் ஆனா நான்கே மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவர்களின் இரட்டை குலதைகளில் ஒருவருக்கு உயிர் ருத்ரோ நீல் என்றும் மற்றொருவருக்கு உலக் தெய்வக் என்றும் பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் பண்டிகை நாட்களில் தங்கள் குழந்தைகளுடன் பண்டிகையை கொண்டாடும் புகைப்படத்தை அவ்வபோது வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கேரளாவின் முக்கிய பண்டிகை என்று கூறப்படும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை(செவ்வாய்க்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கேரளாவில் பல பகுதிகளிலும் இப்போதே ஓணம் பண்டிகையை கொண்டாட ஆரம்பித்து விட்டுனர்.
Also Read : ரசிகர்கள் எதிர்பார்த்த ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா..! எப்போது தெரியுமா? உடனே தெரிஞ்சிகோங்க…
அதன்படி, இந்த ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக நயன்தார மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் தனது இரு மகன்களுடன் கொண்டாடும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.