திரையரங்குகளில் “காட்ஃபாதர்” திரைப்படம் அக்டோபர் 5 அன்று வெளியாகவுள்ளது!
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி உள்ள “காட்ஃபாதர்” என்ற திரைப்படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாகவும், ஹீரோயினாக நயன்தாராவும் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம், மலையாள மொழியில் வெளிவந்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காகும்.
மோகன்லால் நடிப்பிலும் பிரித்விராஜ் இயக்கத்திலும், மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘லூசிபர்’ திரைப்படத்தை தெலுங்கில் தற்போது ரீமேக் செய்து வருகின்றனர்.
சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், உனக்கும் எனக்கும், வேலைக்காரன், ஜெயம், தனி ஒருவன் போன்ற பல படங்களை தமிழில் இயக்கிய இயக்குனர் மோகன் ராஜா, ‘லூசிபர்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை தற்போது இயக்கி வருகிறார். இதில் சல்மான் கான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
தமன் இசையில் காட்ஃபாதர் திரைப்படத்தை ‘என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்’ மற்றும் ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ இணைந்து தயாரித்து உள்ளது. சமீபத்தில் ‘காட்ஃபாதர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோக்கள், வெளியாகி இணையத்தில் வைரலானது.
படக்குழு இந்த நிலையில், இப்படத்திலுள்ள கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ‘காட்ஃபாதர்’ படத்தில், சத்யபிரியா ஜெய்தேவ் என்ற கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இது தொடர்பான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இந்தப்படம் திரையரங்குகளில் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.