என்னது திமிங்கல வடிவில் விமானமா? ஆச்சரியத்துடன் பார்த்த பயணிகள்..!

0
40

உலகின் மிகப்பெரிய விமானங்களில் தற்பொழுது வடிவமைக்கப்பட்டுள்ள ஏர்பஸ் பெலுகா என்ற திமிங்கல வடிவிலான விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தை பார்க்க ஏராளமானோர் வருகை தந்தனர். இந்த திமிங்கல வடிவிலான விமானத்தை பார்த்த பயனாளிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அந்த அளவிற்கு முகவும் பிரம்மாண்டமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திமிங்கல வடிவிலான ஏர்பஸ் பெலுகா என்ற விமானம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் அதன் பிரம்மாண்டமான அமைப்பு மற்றும் வடிவம் காரணமாக விமானப் பயணிகளை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது. இந்த விமானம் முக்கியமாக அதிக அளவு சரக்குகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படிகிறது.

மேலும், உலகின் மிகப்பெரிய திமிங்கல வடிவிலான ஏர்பஸ் பெலுகா என்ற விமானம் மீண்டும் தாய்லாந்துக்கு இரவு 9 மணி அளவில் புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here