தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…

0
7
தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழை

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பது போல, அதற்கேற்றவாறு மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பாப்போம்…

23.05.2023 முதல் 27.05.2023 வரை:

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

26.05.2023 மற்றும் 27.05.2023:

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என அறிவித்துள்ளது.

25.05.2023 முதல் 27.05.2023 வரை:

மன்னர் வளைகுடா மற்றும் தமிழக – ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என அறிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் யாரும் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here