உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி..! எந்த துறைக்கு அமைச்சர்? எப்பொழுது பதவி ஏற்கிறார்?

0
49

தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை அமைச்சராக பதவியேற்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசியலில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கேட்கப்பட்டு வந்த கேள்வியான, உதயநிதி எப்போது அமைச்சராவார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் நேரம் வந்துவிட்டது. தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார்.

இதனை அடுத்து, உதயநிதி ஸ்டாலின் முதலில் சினிமாவில் அறிமுகமானார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் விநியோகம் செய்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க இளைஞரணி செயலாளராக அரசியலில் நுழைந்தார். அதன்பிறகு, 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம். எல். ஏ வாக பதவி வகித்தார். மேலும், அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. இவர் அமைச்சராக பத்தி ஏற்க உள்ள நிலையில் தலைமை செயலகத்தில் புதிய அறை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here