மிக்ஜாம் புயல் அப்டேட்: அதிக கனமழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை…!

மிக்ஜாம் புயல் அப்டேட்: அதிக கனமழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை...!
மிக்ஜாம் புயல் அப்டேட்: அதிக கனமழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை…!

வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் சென்னையிலிருந்து 310 கி.மீ திசையிலே உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது வடக்கு வடமேற்கு பகுதிகளில் நகர்ந்து இன்றைய தினத்திலே (டிசம்பர் 04) புயலானது தீவிரமாக வலுப்பெறவுள்ளது.

இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை விடாது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்னும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பரவலான மழை பெய்யும் எனவும் பல இடங்களில் அதிக கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.

Also Read >> கர்நாடக வங்கியில் காத்திருக்கும் Various காலி பணியிடங்கள்! ஒவ்வொரு மாதமும் ரூ.63000 சம்பளம் வாங்கலாம்…!

ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருபத்தூர், தருமபுரி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிலும் பிற்பகல் 1 மணி வரைக்கும் மழை தொடரும் என தெரிவித்துள்ளது.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top