இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்பு: புதிய முதன்மை ஸ்பான்சராக மாஸ்டர்கார்ட் நிறுவனம்… இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு!
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நேற்றைய அறிவிப்பின்படி, அடுத்த ஒரு ஆண்டுக்கு இந்தியா மற்றும் புதுடெல்லியில் நடைபெறவுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களின் முதன்மை (டைட்டில்) ஸ்பான்சராக மாஸ்டர்கார்ட் நிறுவனம் தேர்வு என தெரிவித்திருந்தது.
2023-ம் ஆண்டு வரையுமே பேடிஎம் நிறுவனத்துடனான ஒப்பந்தம் இருந்த நிலையில், பேடிஎம் விடுத்த வேண்டுகோளின் படி, மாஸ்டர்கார்ட் நிறுவனத்துக்கு ஸ்பான்சர்ஷிப் உரிமையை மாற்றி தருவதாக, இந்திய கிரிகெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனை அதிகாரபூர்வமாக, பிசிசிஐ மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனம் நேற்று, தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாஸ்டர் கார்டு நிறுவனத்தை தலைப்பு ஆதரவாளராக கொண்டு, பிசிசிஐ சார்பாக நடைபெறக்கூடிய அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளும், 2022 – 2023 ஆம் ஆண்டுக்கு நடத்தப்பட உள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனம் இதற்காக பிசிசிஐக்கு செலுத்தும் தொகை எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை.
இந்த ஒப்பந்தம் ஓராண்டுக்கு இருப்பதால், மாஸ்டர் கார்ட் நிறுவனம் பிசிசிஐ சார்பில் நடைபெறவுள்ள தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு, டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போட்டிகளுக்கு மட்டுமே, இந்த ஓராண்டு ஒப்பந்தம் பொருந்தும்.
மாஸ்டர் கார்டு நிறுவனம் ஆண்கள் தேசிய அணிக்கும் பெண்கள் அணிக்கும் நடைபெறும் போட்டிகளுக்கு நிதியுதவி செய்யும். மேலும் மாஸ்டர் கார்ட் நிறுவனம், உள்நாட்டு சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமல்லாமல் உள்நாட்டு ஜூனியர் அணி போட்டிகளுக்கும், தேசிய அளவில் நடைபெற உள்ள ரஞ்சிடிராபி, இராணி டிராபி மற்றும் துலிப்ராபி போன்றவற்றையும் ஸ்பான்சர் செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.