பாலிவுட் நடிகை தபு பேட்டி
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்துள்ள மும்பை பாலிவுட் நடிகையான தபு, இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது இவருக்கு 50 வயதாகிறது.
தமிழில் தாயின் மணிக்கொடி, சினேகிதியே, காதல் தேசம், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், இருவர் போன்ற பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சமீப காலத்தில் நடிகை தபு அளித்துள்ள பேட்டியில்,
“எனக்கும் எல்லா பெண்களை போல தாயாகனும்னு ஆசை இருக்கிறது. ஆனால், அதற்காக திருமணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வாடகை தாய்(சரகோசி) முறையை பயன்படுத்தியும், திருமண செய்து கொள்ளாமல் தாயாவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
எனக்கு தாயாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் நான் இந்த முறையை பின்பற்றுவேன். என்னை யாராலும் தடுக்க முடியாது. திருமணம் ஆகாவிட்டால் இங்கு செத்துப் போக மாட்டோம். திருமணம் அவசியம் இல்லை.
தற்போது வரை, எனது நடிப்பு தொழிலில் நான் முழுமையான மகிழ்ச்சியை அனுபவித்து கொண்டிருக்கிறேன். காதலுக்கும் சரி! திருமணத்திற்கும் சரி! வயது சம்பந்தம் இல்லை. அதே போல், திருமணதிற்கும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் வயது சம்பந்தம் இல்லை. இந்த காலகட்டத்தில் வயது எதற்குமே ஒரு தடையல்ல”
என்று தெரிவித்து உள்ளார். இவரது ‘தாயாக வேண்டும் என்றால் திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை’ என்று நடிகை தபு அளித்த இந்த துணிச்சலான பேட்டி, தற்போது வைரலாக பரவி வருகிறது.