சென்னை வாசிகளை அலறவிட்ட மாண்டஸ் புயல்..!

0
47

மாண்டஸ் புயல் கோர தாண்டவமாடி சென்னையை புரட்டி எடுத்துவிட்டு சென்றிருக்கிறது. புயல் கரையை கடந்து சென்று விட்டாலும் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இரண்டு தினங்கள் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் .

மாண்டஸ் புயல் தமிழக வட கடலூர் பகுதியை நோக்கி வந்தது. இந்த நிலையில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையே கடக்க தொடங்கியது. மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புயல் கரையை கடந்து வருவதால் 70 கிலோ மீட்டர் முதல் 80 கிலோ மீட்டர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசியது.

மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கியதால் சென்னை முழுவதும் சூறைக்காற்று வீசியது. மாண்டஸ் புயலின் மையப்பகுதி இன்னும் கடலில் இருப்பதால் கரையை கடக்கும் நிகழ்வு அடுத்த ரெண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் நடக்கும் என்று புயலின் மையப் பகுதி கடலில் உள்ளது என்றும் வானிலை ஆய்வு இயக்குனர் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது. அந்த புயல் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிலக்கும் . வட உள் மாவட்டங்களில் வழியாக இந்த புயல் கடந்து செல்லும் சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தெற்கு தென்கிழக்கு மாண்டஸ்புயல் நகர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் மின்சார கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்துள்ளன மற்றும் மரங்கள் வேரோடு ரோட்டில் சாய்ந்துள்ளன.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here