மாண்டஸ் புயல் எதிரொலி : இத்தனை மாவட்டங்களில் மின்தடை பாதிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

0
58

சென்னையிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரத்தில் புயல் கரையைக் கடந்தது. இதையடுத்து, மாமல்லபுரத்தில் நேற்று மாலை 6 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாமல்லப்புரம் மட்டுமல்லாமல் பலத்த காற்று மற்றும் கன மழை பெய்த இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசிய போது, சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் காற்றை மிக வேகமாக வீசியதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதன் காரணத்திற்காகவும் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

மேலும், மின் விநியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் இன்று மதியத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் சீராக மின்விநியோகம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here