இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட லியோ படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ஏஜிஸ் நிறுவனத்தின் இயக்கத்தில் தயாரிக்கவுள்ள ‘விஜய் 68’ திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவுள்ளார்.

‘தளபதி 68’ படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் விஜய் இரட்டை சகோதரர்கள் எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஜோதிகாவையும் மற்றொரு கதாபாத்திரத்திற்கு பிரியங்கா மோகனையும் நடிக்க வைப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார் . இதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ‘டாடா ‘ படத்தில் நடித்துள்ள நடிகை அபர்ணா தாஸ் தேர்ந்தெடுக்கபட்டுள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் விஜய் , இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் அமெரிக்கவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு போட்டோ ஷூட் காட்சிகளை எடுப்பதற்காக சென்னையில் இருந்து சென்றுள்ளனர்.
Also Read : தளபதி ரசிகர்களே! லியோ படத்தில் அனிருத் செய்த சிறப்பான சம்பவம்..! இனி தெரிக்கவிடலாமா…
அமெரிக்காவின் விமான நிலையத்தை அடைந்த நடிகர் விஜயை பார்த்த விஜய் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது . இந்நிலையில் 3டி விஎப்எக்ஸ் ஸ்கான் தொழில்நுட்பத்தில் லுக் டெஸ்ட் எடுக்கவிருக்கிறது என்று இயக்குநர் தெரிவித்தார்.