சென்னை உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு… TNPSC தேர்வுகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு…

0
110

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பெண்களுக்கு 30 சதவீத இடங்களை முன்கூட்டியே ஒதுக்கி வைக்கக்கூடாது!

சென்னை உயர்நீதிமன்றமானது, “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பெண்களுக்கான 30 சதவீத இடங்களை முன்கூட்டியே எடுத்து வைத்தப் பிறகு, பணி நியமனங்களை நடத்தக் கூடாது” என்று உத்தரவிட்டுள்ளது.

சதீஸ்வரன் என்பவரால் தொடரப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி மாலா மற்றும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு தீர்ப்பளித்து, இந்தவொரு அறிவுறுத்தலை தெரிவித்துள்ளது.

அதாவது, இதில் ‘மெரிட் மற்றும் சமூக ஒதுக்கீடுகளின் அடிப்படையில் 100 சதவிகித இடங்களை ஒதுக்கீடு செய்யும்போது, பெண்கள் ஏற்கனவே 30 சதவிகிதம் அல்லது அதற்கு மேலோ இருந்துவிட்டால், தனியாக 30 சதவிகிதம் ஒதுக்க அவசியமில்லை’ என்று உத்தரவின் பெயரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘பெண்களின் பிரதிந்தித்துவம் 30 சதவிகிதத்திற்கும் கீழ், இருக்கும்பட்சத்தில் 30% ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீட்டை மேற்கொள்ளலாம்’ என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here