காதலில் வெற்றி பெறுவது எப்படி..? Love Tips in Tamil Words

0
195

தற்போது புதிய உறவில் இணைந்து உள்ளீர்கள் என்றால், உங்களின் முன்னாள் துணையை பற்றிய எந்த விதமான எண்ணத்தையும், செயலையும் தற்போதுள்ள உறவில் கொண்டு வரக்கூடாது என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.

Love Tips in Tamil Words

1. காதலின் சந்தோசம்

1
  • நம் மனதுக்கு நெருக்கமான ஒருவர் நம்முடைய காதலை ஏற்று அவருடைய காதலை சொல்லும்போது அளவில்லா சந்தோசத்தை அடையும் தருணமாக தோன்றும்.
  • அவர்களை விட்டு பிரிய மனம் வராது, அவர்களுடன் நேரம் போதுமானதாகவே இருக்காது, பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பது போல் தோன்றும். மேலும், கிடைக்கும் நேரமெல்லாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும்.
  • நமக்கு பிடித்தது, பிடிக்காதது என்று இதுவரை நேர்ந்த அனைத்து விதமான எண்ணங்களையும், துணையிடம் ஒன்றுவிடாமல் பகிர்ந்துகொண்டால் தான்… அவர்களுக்கு மோட்சமே கிடைக்கும் என்ற அளவிற்கு அவர்களின் சிந்தனை இருக்கும்.
  • ஆனால், ஒரு சில நேரத்தில் இப்படி இருப்பதும் பிரச்சனையாக வர வாய்ப்புகள் உண்டு என்பதை நினைவில் வைத்திருப்பது நல்லது. இது என்ன அந்த அளவிற்கு பிரச்சனைக்குரிய விஷயமா…? என தோன்றக்கூடும். உறவில் எப்போதும் சின்ன சின்ன புரிதல் இன்மையும் கூட பெரிய அளவில் பிரிவுகளுக்கு காரணமாகிறது. இதை பற்றிய விளக்கத்தை தற்போது காணலாம்.

2. Ex – பற்றி பேசாமல் இருப்பது நல்லது

2
  • நீங்கள் புதிய உறவில் இருக்கும் பொழுது, பழைய துணை பற்றிய எந்ததொரு எண்ணமும், புதிய உறவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • உங்களிடம் இந்த சிந்தனை தெளிவாக இருப்பது அவசியம். மேலும், உங்களின் வாழ்க்கையில் தற்போது இல்லாதவரை பற்றி ஏன் பேசவேண்டும் என்பதை சிந்தியுங்கள்.
  • நீங்களே அவர்களை பற்றி பேசுவதை தவிர்த்து விடுவீர்கள். அப்போது உங்களுக்கே புரியும். இல்லையெனில், தற்போதுள்ள உறவில் தேவையற்ற பிரச்சினையை நீங்களே உருவாக்கி விடுவீர்கள்.
  • இதனால், தற்போதுள்ள உங்கள் துணை நீங்கள் இன்றும் பழைய உறவையே நினைத்துக் கொண்டிருப்பதால், இந்த உறவில் உங்களுக்கு ஈடுபாடு இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார். இது, இந்த உறவிலும் தேவையற்ற சிக்கலை ஏற்படுத்திவிடும்.

3. நண்பர்கள்

3
  • உங்கள் துணையின் நண்பர்களை பற்றி அதிகம் பேசுவதை தவிருங்கள். உங்கள் துணைக்கு நண்பர்களுடன் இருப்பது பிடித்திருக்கும் வேளையில், அதில் உங்களுக்கு ஈடுபாடில்லை என்றால் மட்டும், அதனை உங்கள் துணையிடம் சொல்லி புரிய வையுங்கள்.
  • அதனைவிடுத்து உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால், அவர்களை பற்றிய உங்களின் தவறான ஒப்புதலை உங்கள் துணையிடம் கூறுவது சரியானதாக இருக்காது. உங்களுக்கு பிடித்தவராக இருந்தாலும் துணையின் முன்பு அதிகமாக புகழுவதும் கூடாது.
  • அதேபோல், பிடிக்காதவராக இருந்தாலும் அவர்களையும் உங்களின் துணையிடம் தரம் தாழ்த்தியும் கூறக் கூடாது. இந்த இரண்டுமே, தற்போதுள்ள உறவில் பிரிவை ஏற்படுத்தக்கூடும். எனவே, தேவையின்றி துணையின் நண்பர்களை பற்றி பேச வேண்டாம்.

4. உன் காதலை எனக்கு நிரூபி

4
  • ஒரு சில திரைபடங்களில் காதலர்களாக இருக்கும் ஒருவர் தனது துணையிடம், “நீ என் மீது கொண்டுள்ள காதலை நிரூபித்துக் காட்டு” என்று கூறுவதை கேட்டு இருப்போம்.
  • அதற்காக காதலனோ அல்லது காதலியோ சில விந்தையான செயல்களை செய்து, தனது காதலை நிரூப்பிப்பார்கள். இது திரைப்பட காதல் என்பதால், திரைப்படங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
  • ஆனால், நிஜ வாழ்க்கையின் காதல் என்பது… அன்பு, புரிதல், நம்பிக்கை போன்ற பற்பல உணர்வுகளை கொண்டுள்ளது. இது ஒருவரை ஒருவர் அவர்களது சூழ்நிலைக்கு ஏற்ப புரிந்துக் கொள்ளும் நிலையை உருவாக்கும்.
  • எப்போதும், “தனிமையாக உணர்கிறேன்” என்ற உணர்வை மாற்றி புதிய சிந்தனையை மனதில் விதைக்கும். “என்றும் எனக்காக நீ இருக்கிறாய், உனக்காக நான் இருக்கிறேன்” என்ற நேர்மறையான எண்ணத்தை சிந்திக்க வைத்து புதிய நம்பிக்கையை கொடுக்கும்.

5. செயல்பாடுகள்

5 1 1
  • உங்கள் துணையின் ஒரு சில செயல்கள் பழைய உறவில் இருந்ததை கூட நியாபக படுத்தக்கூடும். ஆனால், அதனை சட்டென்று அப்படியே சொல்லிவிட்டால் உங்களது உறவில் சிக்கலை உண்டாக்கிவிடும்.
  • உங்கள் துணையுடன் நீங்கள் எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் இந்த தவறை கண்டிப்பாக செய்ய கூடாது.
  • இதுபோன்றதொரு விஷயத்தை கடந்து சென்றுவிடுவது நல்லது. தேவை இல்லாமல் பழைய உறவை பற்றி பேசி தற்போது நன்றாக உள்ள உறவையும், சூழ்நிலையையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

6. நானா இல்லை அவர்களா?

6
  • இப்படிப்பட்ட கேள்வியோடு கூடிய சூழ்நிலையை யாருக்கும் கொடுக்க வேண்டாம். முக்கியமாக உங்கள் வாழ்க்கை துணையிடம் இது போன்றதொரு கேள்வியை கேட்டு அவர்களுக்கு, சாய்ஸ் என்ற பெயரில் நானா இல்லை அவர்களா? என்ற நெருக்கடி நிலையோடு மன உளைச்சலுக்கும் தள்ள வேண்டாம்.
  • நீங்கள் மற்றவரைவிட உங்கள் துணையை நன்கு புரிந்தவர் என்றால், அவர்களுக்கான இடத்தை நீங்களே முன்வந்து அளிக்க வேண்டும்.
  • ஒருவேளை, நீங்கள் அந்த இடத்தில் நிராகரிக்க பட்டாலோ அல்லது அவமதிக்க பட்டாலோ, உங்களுக்கான வெகுமதியை உங்கள் துணையின் அன்பிலும், கண்ணீரிலும் உங்களின் மீதுள்ள காதலாக வெளிப்படும்.

7. குறைசொல்லாதீர்கள்

7
  • உங்கள் துணையின் செயல்பாடுகளை எதிர்மறையான கண்ணோட்டத்தில் பார்த்து குறை சொல்வதை தவிருங்கள்.
  • இருப்பினும், அவர்களின் செயல்கள் உங்களுக்கு தவறுதான் எனப்பட்டாலும், அதனை சரியான நேரத்தில் அவர்களது மனதை புண்படுத்தாத வார்த்தைகளை கொண்டு, நீங்கள் அவர்களுக்கு புரியவைக்க முயற்சிக்கலாம்.
  • “சிரிக்க வைக்கிறேன்” என்ற பெயரில் அவர்களையோ அல்லது உங்களை நீங்களே கிண்டல் செய்யும் விதமாகவோ எதையும் முயற்சி செய்ய வேண்டாம்.
  • ஏனென்றால், எல்லா நேரங்களிலும் மனதின் எண்ணங்கள் ஒரே மாறியானதாக அமையாது. எனவே, ஒரு செயலை செய்வதற்கு முன்பு, பலமுறை யோசித்து செயல்படுவதில் தவறில்லை.

8. அதட்டல்

8
  • உங்களின் துணை என்பதால் அவர்களை எல்லா நேரங்களிலும் தான் சொல்வதையே சரி என்று சொல்ல வைத்து விடலாம் என்று ஒரு போதும் நினைக்க கூடாது. சரியான துணை என்றால் இருவருடைய எண்ணங்களிலும், செயல்களிலும் அவரவருக்கான சமமான இடத்தை வழங்கி கொள்ள வேண்டும்.
  • உதாரணமாக, “நீ போகாதே”, “வாயை மூடு”, “நீ பேசாதே”, “தள்ளி நில்”, “சொல்வதை கேள்” என இது போன்ற கட்டளையை விதிக்கும் வார்த்தைகளை முடிந்தவரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இதுபோன்று நீங்கள் அவர்களின் மேல் எப்போதும் உங்கள் எண்ணங்களை திணிக்கையில், அவர்களுக்கு உங்களின் மேல் வெறுப்பு ஏற்படக்கூடும்.
  • எப்போதும் அன்பாகவும், அரவணைப்புடனும் நடந்துகொள்வது அவசியமாகும். குறிப்பாக, எந்தவொரு சூழலிலும் துணையின் மனம் புண்படாமல் பார்த்துகொள்வது நல்லது. மேலும், எப்போதும் கண்ணியத்தை குறைக்கும் விதமான வார்த்தைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • உங்களின் அன்பு மட்டும் துணையின் மேல் எப்போதும் குறையாமல் இருக்கட்டும். அவர்களை வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள். நீங்களும் மன நிறைவுடன் வாழ்வீர்கள்.  

ALSO READ

மன அழுத்தம் குறைந்து… மகிழ்ச்சியுடன் வாழ… எளிமையான 8 டிப்ஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here