தெறிக்கவிடலாமா… விக்ரம் படத்தை முறியடித்து புதிய சாதனை படித்ததை ஜெயிலர் திரைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்குயுள்ள திரைப்படம்தான் ஜெயிலர். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் வெளியிடப்பட்டது. இப்படம் வெளியானதை ரசிகர்கள் கேக் வெட்டி, மேளம், தாளம், நடனம் என திருவிழா போல் கொண்டாடினார்கள். இப்படம் வெளியான முதல் நாளே அதிக வசூலை பெற்றுள்ளது மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். இப்படம் வெளியானது முதல் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிசில் 400 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி, நேற்று ஒரு நாளில் மட்டும் இப்படத்துக்கு உலகம் முழுவதும் ரூ.15 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வாழ்நாள் வசூலை ஜெயிலர் படம் 7 நாட்களில் முறியடித்து சாதனை படைத்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM