Leo Update Antony Das: யார் அந்த ஆண்டனி தாஸ்..? லியோ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!

Today Cinema News 2023

மாஸ்டர் படத்திற்கு அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘லியோ’ என்ற திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Today Cinema News

இந்த படத்தன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, இதற்க்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லியோ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய கதாபாத்திரம் ஆண்டனி தாஸ் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM