‘லியோ’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் பரவும் விஜய்-திரிஷா புகைப்படம்

0
14
Vijay-Trisha photo goes viral

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் லியோ. இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.

இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிகின்றனர். முதல் கட்ட படபிடிப்பானது காஷ்மீரில் நடைபெற்றது. அதற்க்கான வீடியோ ஒன்றை இப்படக்குழு வெளியிட்டது. இரண்டம் கட்ட படப்பிடிப்பு நம்ம சென்னையிலே நடைபெறுகிறது என அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று திரிஷாவின் பிறந்தநாள். அதனையொட்டி லியோ படக்குழு விஜய் மற்றும் திரிஷா சேர்ந்து இருக்கும் போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதுவே பெரும் வைரலாகி வருகிறது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here