விஜயின் தளபதி 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! ரசிகரின் கேள்விக்கு பதில் கொடுத்த வெங்கட் பிரபு…!

Today Cinema News 2023 Latest Update

Today Cinema News 2023

இயக்குனர் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் பல திரைப்பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிற ‘விஜய் 68’ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 68’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில், தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படவுள்ளது. இப்பணிக்காக சமீபத்தில் படக்குழு, லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர்.

தளபதி ரசிகர் ஒருவர், டுவிட்டரில் ‘தளபதி 68’ படத்தின் அப்டேடை கேட்டிருந்தார். அதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு ‘விரைவில்’ என பதில் அளித்து இருக்கிறார். இந்த பதிவை ரசிகர்கள் தற்போது, தங்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.