2023-2027 ஆம் ஆண்டுகளுக்கான கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி வெளியிட்டது! இந்தியாவுக்கான ஆட்டங்கள் எவ்வளவு?

0
167

ஆடவருக்கான 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் அட்டவணையை இன்று ஐசிசி வெளியிட்டது. ஐசிசியில் முழு உறுப்பினர்களாக உள்ள 12 நாடுகளும் வரவிருக்கும் 4 ஆண்டுகளில் 281 ஒருநாள், 323 டி20 மற்றும் 173 டெஸ்டுகள் என மொத்தமாக 777 சர்வதேச ஆட்டங்களையும் விளையாட இருக்கின்றனர். இதுவரை 694 ஆட்டங்களை, இந்த 12 நாடுகளும் கடந்த 4 ஆண்டுகளில் விளையாடி உள்ளனர்.

1992-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இரு டெஸ்ட் தொடர்களில் 5 ஆட்டங்களை கொண்டதாக, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் விளையாடவுள்ளன. இந்தியாவின் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்டுகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. இந்தியா தலா 5 டெஸ்டுகள் கொண்ட தொடர்களிலும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என இரு நாடுகளுக்கு எதிராக இனி விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் அணிகளுக்கெதிரான, இந்தியா விளையாடும் டெஸ்டுகள்:

  • 2024 ஜனவரி – இந்தியாவில் 5 டெஸ்டுகள் vs இங்கிலாந்து
  • 2024 நவம்பர் – ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா
  • 2025 ஜூன் – இங்கிலாந்தில் 5 டெஸ்டுகள் vs இங்கிலாந்து
  • 2027 ஜனவரி – இந்தியாவின் 5 டெஸ்டுகள் vs ஆஸ்திரேலியா

ஏப்ரல், மே, ஆகஸ்ட், ஜனவரி ஆகிய மாதங்களுக்கான பிபிஎல், ஐபிஎல், தி ஹண்ட்ரட் ஆகிய டி20 லீக் போட்டிகளுக்கு தற்போது, சர்வதேச ஆட்டங்கள் மிகக் குறைவாகவே ஒதுக்கப் பட்டுள்ளன.

1. இந்திய அணி 2023- 2025 ஆம் ஆண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் நியூஸ்லாந்து ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் விளையாட உள்ளது. மேலும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் விளையாட உள்ளது.

2. இந்திய அணி 2025- 2027 ஆம் ஆண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் விளையாட உள்ளது. மேலும் இலங்கை, நியூஸ்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் விளையாட உள்ளது.

மேலும், 5 வெள்ளைப் பந்து ஐசிசி போட்டிகள் வருகின்ற நான்கு ஆண்டுகளில் நடைபெற உள்ளன. ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவே, ஒவ்வொரு வருடமும் நடைபெற உள்ள முக்கியமான ஐசிசி போட்டிகளாவன; 2023-ம் ஆண்டுக்கான இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை, 2024-ம் ஆண்டுக்கான மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலக கோப்பை, 2025-ம் ஆண்டுக்கான பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை, 2026-ம் ஆண்டுக்கான இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை, 2027-ம் ஆண்டுக்கான ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் ஒருநாள் உலக கோப்பை ஆகியன அடங்கும்.

இந்தியா விளையாடவுள்ள 2024- 2027 ஆம் ஆண்டுகளுக்கான, 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடர்கள்:

  • 2023 நவம்பர் – 5 டி20 vs ஆஸ்திரேலியா
  • 2025 ஜனவரி – 5 டி20 vs இங்கிலாந்து
  • 2025 அக்டோபர் – 5 டி20 vs ஆஸ்திரேலியா
  • 2025 நவம்பர் – 5 டி 20 vs தென்னாப்பிரிக்கா
  • 2026 ஜனவரி – 5 டி20 vs நியூஸ்லாந்து
  • 2026 ஜூலை – 5 டி20 vs இங்கிலாந்து
  • 2026 செப்டம்பர் – 5 டி20 vs மேற்கிந்தியத் தீவுகள்
  • 2026 அக்டோபர் – 5 டி20 vs நியூஸ்லாந்து

38 டெஸ்டுகள், 42 ஒருநாள் மற்றும் 61 டி20 ஆட்டங்களில் இந்திய அணி (ஐசிசி போட்டிகளை தவிர), 2024 முதல் 2027 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு விளையாட உள்ளது.


RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here