உங்கள் முகம் பளிச்சிட நச்சுனு சில டிப்ஸ் – Beauty Tips

0
171

நமது வீட்டிலிருந்தே முகத்திற்கு தேவையான அழகு குறிப்புகளை பயன்படுத்தினால் இயற்கையான அழகை பெற முடியும். சரும பாதுகாப்பு என்று வருகையில் நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது முகத்திற்குதான். நமது முக பொலிவில் ஏற்படும் சரும பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அழகு குறிப்புகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

மஞ்சள்:

மஞ்சள்

1. மஞ்சள் என்றதும் நமக்கு முதலில் தோன்றுவது சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள்தான். மஞ்சளில் உள்ள ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் நமது சருமத்தில் ஏற்படும் அலர்ஜிகளிடமிருந்து நம்மை பாதுகாத்திடும்.

2. மஞ்சளானது சமையலுக்கு உபயோகப்படுவது மட்டுமல்லாமல், எல்லா வகையான சரும பிரச்சினைகளையும் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய்

1. நமது உடலுக்கு குளிர்ச்சியை தருவதில் முக்கிய பங்கு வெள்ளரிக்கும் உண்டு. இது உடலுக்கு மட்டுமின்றி முகத்திற்கும் அழகினை சேர்க்க உதவுகிறது.

2. வெள்ளரியை பேஸ்ட்டாக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி பேஸ் மாஸ்க்காக முகத்தில் போட்டு நன்றாக உலர்ந்தப்பின் கழுவி விட வேண்டும். இது முகத்திற்கு மேலும் அழகினை சேர்க்கிறது.

கற்றாழை:

கற்றாழை

1. கற்றாழையில் உள்ள சத்துக்கள் சருமத்தை ப்ரஸ்ஸாக வைத்து கொள்ள உதவுகிறது. இதில் உள்ள மருத்துவ குணமும் மிகவும் அதிகம்தான்.

2. வெள்ளரி சாருடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து தினமும் இரவு உறங்கும் முன் இதை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் ஏற்படும் சரும பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பதோடு சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுத்து பாதுகாக்கிறது.

இதை தவிர முகத்திற்கான மேலும் சில அழகு குறிப்புகளும் உங்களுக்காக…

1. உலர்ந்த ரோஜா இதழுகளுடன் சிறிய அளவு பன்னீரும், சந்தனமும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிட முகம் பொலிவாக தோன்றும்.

2. பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், கற்றாழை இவை அனைத்தையும் முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

3. வெள்ளரியையும், வேப்பிலையையும் முதலில் ஒன்றாக அரைத்து கொள்ள வேண்டும். மேலும் ஓட்ஸை தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்த வெள்ளரி, வேப்பிலையுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், உங்களின் முகம் பளிச்சென்று மாறும்.


RECENT POSTS IN VALAIYITHAL:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here