இந்தியா-நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டி! வில்லியம்சன் விலகலால் பரபரப்பு…!

0
52

மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் நடைபெறுகிறது. இந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி மவுன்ட் மவுன்கனூயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று இந்த இரு அணிகளுக்குகிடையான போட்டி வெலிங்டனில் நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதில், இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ஓய்வு பெரும் நிலையில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தலைமை தாங்குகிறார். இளம் வீரர்களை கொண்டு விளையாடும் இந்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்து அணிகள் தன் சொந்த மண்ணில் தொடரை இலக்காமல் சமன் செய்ய தீவிரம் காட்டுவார்கள் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. இதனை தொடர்ந்து காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதால் இன்று நடைபெறும் டி20 போட்டியில் அவர் கலந்துகொள்ளவில்லை. இவருக்கு பதில், டிம் சவுத்தி நியூசிலந்து அணியை வழி நடத்துவார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here