இந்த நடவடிக்கை மேற்கொண்ட அரசுக்கு பாராட்டுகள் – அன்புமணி ராமதாஸ்

0
50

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடைந்துள்ளனர். இதற்காக அரசு மேற்கொண்ட’ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், இந்த புயலால் மக்களுக்கு பொருள் இழப்பும், உயிர் இழப்பும் கிடையாது என்றும் இந்த புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த்து என்றும் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும், இந்த புயலால் கடலோரப்பகுதிகளில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை அரசே சரி செய்து தர வேண்டும்; மீனவர்களுக்கு புதிய வலைகளை வாங்கித் தர வேண்டும். கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அரசின் செலவில் கட்டித்தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here