தடைகளை தாண்டி மீண்டும் தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு!

0
12
தடைகளை தாண்டி மீண்டும் தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு!

90s கிட்ஸ்க்கு மறக்க முடியாத படங்களில் ஒன்று தான் இந்தியன் படம். இந்த திரைப்படம் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா, கஸ்தூரி, மனிஷா கொய்ரால உள்ளிட்டோர் நடிப்பில் 1996ஆம் வருடத்தில் திரைக்கு வந்து மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்துவிட்டது. இதனையடுத்து 27 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் – 2 பாகத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். இதன் தொடக்கத்திலே தயாரிப்பாளருக்கும், டைரக்டர்க்கும் சண்டை, வழக்குகள், விபத்து என பல்வேறு பிரச்சனைகள் ஏற்ப்பட்டது. இதானால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்னும் திரைப்படத்தை இயக்குகிறார் ஷங்கர். நேற்றைய தினத்தில் இப்படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சியுடன் கூடிய முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதோடு இன்று முதல் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடக்கி உள்ளது என்று தெரிவித்துள்ளர். படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படம் எப்போது வரும்? தீபாவளிக்கா இல்ல பொங்கல் பண்டிகையில் ரீலீசாகுமா என மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு வருகிறது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here