ரெஸ்ட் எடுக்குற நேரத்தில அடுத்தடுத்து 3 படங்களில் கார்த்தி…! ஜெட் வேகத்தில பிஸியாக மாறிட்டார்…!

Today Tamil Cinema Seithikal 2023

தமிழ் சினிமாவிலே குறுகிய காலத்திலே முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் கார்த்தி. சமீபத்தில் சர்தார், கைதி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது மேலும் பிஸியாகி விட்டார் நடிகர் கார்த்தி. இந்நிலையில் தொடர்ந்து 3 படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 25 வது படமான ‘ஜப்பான்’ படத்தோட வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது.

இதனையடுத்து, இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிக்க போகிறார் நடிகர் கார்த்தி. அது அவருக்கு 26 வது படமாகும். இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு நவம்பர் மாதத்தில் தனது 27-வது படத்தில் நடிக்க இயக்குனர் பிரேம் குமாருடன் இணைகிறார். இந்த படத்தில் அரவித்சாமி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தை சூர்யா தான் தயாரிக்கிறார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM