மீண்டும் களமிறங்கும் கரீனா பிரீ பயர் கேம்! எப்போ டவுன்லோட் பண்ணனும்னு தெரியுமா?

இன்றைய செய்திகள் 2023

Today Latest News 2023

Today Latest News 2023: ஆன்லைன் விளையாட்டுகளில் மிக பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று தான் கரீனா பிரீ பயர் கேம். சிங்கப்பூரைச் சேர்ந்த கரீனா நிறுவனம் இந்த கேமை உருவாக்கி உள்ளது. இந்த விளையாட்டில் விளையாட விரும்பவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ தங்களுக்கு பிடித்த ஆயுதங்களை எடுத்து சண்டையிடுவது தான் இந்த விளையாட்டு. இதில் யார் வெற்றி பெறுகிறாரோ அவர்களே வெற்றியாளர். இதில், விளையாடும் ஒவ்வொரு நபருக்கும் தரவரிசை பட்டியல் இருக்கும். விளையாட்டில் தொடர்ந்து முன்னேறி செல்லும் போது, தரவரிசை முன்னேறிக் கொண்டே இருக்கும்.

இந்தியாவில், பாதுகாப்பு காரணமாக கரீனா பிரீ பயர் கேம் விளையாட்டை கடந்த பிப்ரவரி மாதம் 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. காரணம், இந்த செயலியின் மூலம் பயனர்களின் தகவல்களை சேகரிக்க முடியும் என்பதால் “பாதுகாப்பு அச்சுறுத்தல்” என வகைப்படுத்தப்பட்டு மத்திய அரசால் இந்த கேம் தடை செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

Also Read >> ஜனாதிபதி மாளிகை – பொதுமக்களுக்கு இன்று முதல் பார்வையிட அனுமதி இல்லை!

அதன் பிறகு, இந்திய அரசின் சட்டத்திற்கு உட்பட்டு செயலியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே மீண்டும் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் பிரீ பயர் இந்தியா என்ற பெயரில் களமிறங்க உள்ளது. இந்த செயலியை வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று உங்க மொபைலில் டவுன்லோட் செய்து விளையாடலாம்.

மேலும், தோனி தல என்ற பெயரில் விளையாடும் கதாபாத்திரம் இணைக்கப்பட்டிருக்கிறது. இவரை தவிர, கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி, டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் மற்றும் கபடி சாம்பியன் ராகுல் சவுத்ரி, பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நேவால்,போன்ற விளையாட்டு பிரபலங்களும் இந்த கேமில் இடம் பெற்றுக்கிரார்கள். இதில் உங்களுக்கு பிடித்த விளையாட்டு பிரபலங்களுடன் விளையாடி மகிழலாம் என கரீனா நிறுவனம் தெரிவித்துள்ளது.