மீண்டும் லேடி கெட்டப்பில் களமிறங்கும் கமல்ஹாசன்! ‘இந்தியன் 2’ படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…!

Today Latest Cinema News 2023

தமிழ் சினிமாவிலே புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தனது சிறு வயதிலிருந்து நடிக்க ஆரம்பித்து இன்று வரை நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். எந்த கதையாக இருந்தாலும், அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ற மாதிரி தனது நடிப்பால் அசத்துவார்.

Today Latest Cinema News

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெமினி கணேசன், நாகேஷ், மீனா, நாசர், டெல்லி கணேஷ், மணிவண்ணன் ஆகியோர் நடித்த படம் அவ்வை சண்முகி. இந்த படத்தை இப்போது பார்த்தாலும் கமல் வயிறு குலுங்கி சிரிக்காமலும், பாராட்டாமலும் இருக்கவே முடியாது. அவ்வை சண்முகி என்ற பெண் வேடத்தில் அசத்தியிருப்பார்.அதே போல, கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான தசாவதாரம் என்ற படத்தில் பாட்டி வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் ‘இந்தியன் 2’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘இந்தியன் 2’ படத்தில் அவ்வை சண்முகி போல பெண் வேடத்தில் நடித்துள்ளதாக சமூகவளைதலங்களில் தீயாய் பரவி வருகிறது. எனவே ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்போடு இருக்கிறார்கள்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM