இனி வீட்டிற்கே வந்து விற்பனை செய்யும் காய்கனி அங்காடி! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0
43

தமிழக அரசு நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வடையில், பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, மகளிர் சுய உதவிகுழு கடன் தள்ளுபடி இதுபோன்ற மக்களுக்கு பயன்தரும் வகையில் நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தற்பொழுது தமிழக அரசு மக்களுக்கு பயன்தரும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேளாண்துறை சார்பில் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் 20 நடமாடும் காய்கறி அங்காடியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் காய்கறி அங்காடி கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் காய்கறி அங்காடி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here