NIT திருச்சியில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலைவாய்ப்பு | ஈஸியா இமெயிலில் விண்ணப்பியுங்க…!

NIT Trichy Recruitment 2024 Notification Out | Apply Online Before January 31, 2024

NIT Trichy Recruitment 2024

திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute of Technology – NIT) அட்டகாசமான வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதில் 01 ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ என்ற பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், M.Sc படிப்பை படித்தவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைன் (ஈமெயில்) முறையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

இப்பணிக்கு எழுத்துதேர்வு மற்றும் இன்டர்வியூ முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதம் ரூ.31,000 சம்பளம் தரப்படும். இந்த ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணியை நம்ம திருச்சியிலே செய்யலாம். அதுமட்டுமில்லை, இதற்கு நீங்கள் எந்தவொரு கட்டனும் கட்ட தேவையில்லை. தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் அறிவித்த வேலைக்கு வருகின்ற ஜனவரி மாதம் 12 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரைக்கும் ஆன்லைன் மூலமாக அப்ளை பண்ணிடுங்க. தாமதமாக வருகிற விண்ணப்பத்தினை ஏற்க மாட்டார்கள்.

ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Also Read >> IIT மெட்ராஸ்ல வேலை பார்க்க ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு – சம்பளம் ரூ.58 ஆயிரம் வரை…!

உங்களுடைய விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய ஈமெயில் அட்ரஸ்

arivazhagan@nitt.edu

இந்த வேலை குறித்த மேலும் விவரங்களை அறிந்துகொள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் தனது அதிகாரபூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ள இந்த Notification லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top