உங்க ஈமெயிலின் வழியாவே அப்ளை பண்ணலாம் இந்த ஜிப்மர் வேலைக்கு! முழு விவரம் உள்ளே…

JIPMER Puducherry Recruitment 2024 Notification Released | Apply Before January 20th

JIPMER Puducherry Recruitment 2024

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திட்ட பணியாளர் செவிலியர்-III பணியிடத்தை நிரப்ப முடிவு செய்துள்ளனர். இந்த வேலைக்கு நீங்கள் மிக எளிமையாக ஆன்லைன் அதாவது உங்களுடைய ஈமெயில் மூலமாகவே அப்ளை பண்ணிடலாம்.

ஜிப்மர் நிறுவனம் அறிவித்த இத்தகைய பணிக்கு பி.எஸ்சி, எம்.எஸ்சி, நர்சிங் ஆகிய படிப்பில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சிபெற்றரவராக இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும் சம்பளம், விண்ணப்பிக்கும் கடைசி நாள், வயது வரம்பு இதுபோன்ற விவரங்கள் கீழே கொடுத்துள்ளோம். தொடர்ந்து படியுங்கள்.

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தற்போது திட்ட பணியாளர் செவிலியர்-III இந்த பணிக்கு 01 காலியிடத்தை தான் நிரப்ப தான் ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த ஜாப்க்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுடைய வயது அதிகபட்சம் 35 வயதாவது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய இந்த அடிப்படையில் தான் ஜிப்மர் நிறுவனம் திட்ட பணியாளர் செவிலியர்-III பணியாளரை தேர்வு செய்ய உள்ளது. இப்படியாக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.33,040 தொகை வழங்கப்படும். மேலும், தேர்வாகும் நபர் புதுச்சேரி பகுதிகளில் பணியமர்தப்படுவார்கள்.

Also Read >> Bharathidasan University Jobs 2024 | பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வேணுமா? அப்போ இந்த ஜாப் உங்களுக்குத்தான்! Apply Now

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தினை பிழையில்லாமல் பூர்த்தி செய்து, அதனை ஜனவரி 3 (இன்று முதல்) ஜனவரி 20 ஆம் தேதி வரைக்குள் இமெயிலில் ரொம்ப சுலபமாக அப்ளை விண்ணப்பியுங்க.

அப்ளிகேஷன் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

shalipriya85@gmail.com

கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வமான Notification கிளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்ய Application Form ஐ கிளிக் பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top