ஜெயம் ரவி – நயன் காம்போவில் உருவான “இறைவன்” படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு..! அப்போ நாளைக்கு வெயிட்டான சம்பவம் காத்துகிட்டு இருக்கு…

இயக்குனர் அகமது ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவான ‘இறைவன்’ திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியும் நயன்தாராவும் இணைந்து நடித்துள்ளனர். இது நடிகர் ஜெயம்ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் 2 வது திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Jayam Ravi Nayan combo movie Iraivan trailer release tomorrow Then tomorrow the big event is waiting read it now

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவுபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. பான் இந்தியா முறையில் வெளியாகும் இந்தப் படத்தின் போஸ்ட்
புரொடக்‌ஷன் வேலைகள் நிறவுபெறாத நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீஸ்சாக இருந்த ‘இறைவன்’ திரைப்படமானது ரிலீஸ்சாகவில்லை.

Also Read : நியூசிலாந்து அணியின் கேப்டன் திடீர் மாற்றம்..! அவருக்கு பதில் இவரா?

இந்நிலையில், வருகிற செப்டம்பர் 3 ஆம் தேதி (நாளை) இத்திரைப்படத்திற்க்கான டிரெய்லர் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. நாளை இப்படத்தின் டிரெய்லரில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று அனைவரும் எதிர்ப்பார்க்கின்றனர். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.