நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி உலகெங்கும் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் பாடல்களை அனிருத் இசையமைத்திருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் ஒரு நல்ல வரவேற்பை பெற்று, இதுவரை ரூ.525 கோடிக்கும் அதிகமாக வசூலாகி உள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் 3 வது அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாகவும், 3 வது தமிழ் திரைப்படமாகவும் அமைந்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து BMW i7 மற்றும் BMW X7 மாடல் கார்களை அவரது முன் நிறுத்தி அதில் ஒன்றை தேர்த்தெடுக்குமாறு கூறினார்.
Also Read : தமிழக அரசு பேருந்துகளில் மீண்டும் குறைக்கப்பட்ட கட்டணம்..! போக்குவரத்து கழகத்தின் தடாலடி அறிவிப்பு!!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இதில் BMW X7 மாடல் காரை தேர்ந்தெடுத்தார். அதனை பரிசாக கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கினர். இதை மனமகிழ்வுடன் ரஜினிகாந்த் பெற்று கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு முன்னதாகவே, நடிகர் ரஜினிகாந்திற்கு கலாநிதி மாறன் காசோலை வழங்கியது குறிப்பிடத்தக்கது.