அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..! தமிழக அரசின் புதிய அரசாணை வெளியீடு!!

தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதேபோல், தமிழக அரசு ஊழியர்களின் நலனுக்காவும் அவர்களின் குழந்தைகள் நலனுக்காவும் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில வட்டி இல்லா முன் பணம் திட்டத்தின் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

Jackpot hit for government employees Tamil Nadu Government New Ordinance watch now

இந்நிலையில், இந்த திட்டத்தில் தற்பொழுது புதிய மாற்றம் செய்து தமிழக அரசு தற்பொழுது அரசாணையை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழக அரசு ஊழியர்களின் குழந்தைகள் பொறியியல், தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில இனி கூடுதல் முன்பணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி, தொழில்முறை கல்வி பயிலும் மாணவர்களுக்கான வட்டி இல்லா முன் பணம் திட்டத்தின் மூலம் ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், தற்பொழுது ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான முன்பண வரம்பானது ரூ.20 ஆயிரமாக இருந்த நிலையில் தற்பொழுது ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM