ஒவ்வொரு ஆண்டும் ISL தரம் முன்னேறி வருகிறது! கேப்டன் சுனில் சேத்ரி விளக்கம்!

Today Latest Sports Update

Today Latest Sports Update

இந்தியாவில் IPL தொடர், கிரிக்கெட் போட்டிக்கு நடத்தப்பட்டு வருகின்றது. இதுபோலவே கால்பந்து போட்டிக்கு, இந்தியன் சூப்பர் லீக் (ISL) தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான இந்தியன் சூப்பர் லீக் என்ற ISL கால்பந்து தொடர் வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் கேரள-பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இதில், பெங்களூரு அணியின் கேப்டனாக சுனில் சேத்ரி பொறுப்பேற்று உள்ளார்.

தற்போது பெங்களூரு அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற சுனில் சேத்ரி, கால்பந்து தொடரின் தரம் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது என கூரியுள்ளார். தேசிய அணியில் இடம்பிடிக்க முயற்சி எடுக்கும் வீரர்களுக்கு, சிறந்த ஒரு வெற்றி தளமாக ISL தொடர் உள்ளதாகவும் கூறினார். மேலும் ISL-ல் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணியில் இடம் பிடித்த சந்தேஷ் ஜிங்கனை சிறந்த எடுத்துக்கட்டாக கூறினார்.

நாட்டிற்காக விளையாட்டு துறையில் சாதனை படைக்க விரும்பும், அனைத்து இளம் வயதினருக்கும் ஐ.எஸ்.எல் தொடர் முதற்படியாக உள்ளது. வீரர்கள் ஆண்டுதோறும், தங்களின் தனித்திறமையை வளர்த்துக்கொள்வதால் ISL தொடரின் தரம் உயர்ந்து வருகிறது. ISL தொடரில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு, அனுபவ பூர்வமாகவும் அறிவியல் சார்ந்த பயிற்சியாகவும் இத்தொடர் அமைந்துள்ளது என அவர் கூறினார்.