என்னது தனி ஒருவன் பார்ட் 2 வரப்போகுதா..? இனி ஒரே ஜாலிதான்… சற்றுமுன் வெளியான புதிய அப்டேட்!!

நடிகர் ஜெயம்ரவி மற்றும் நயன்தாரா காம்பினேஷனில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் தனி ஒருவன். இந்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. ஏனென்றால் தனி ஒருவன் படம் முழுவதும் டுவிஸ்ட்டாகவே இருக்கும். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் மெஹா ஹிட் அடுத்தது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், தனி ஒருவன் படம் வெளியாகி வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதியுடன் 8 வருடங்கள் கடந்துள்ளது. இதனை படக்குழு கொண்டாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனி ஒருவன் படம் 8 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாகவும் ரசிகர்களுக்கு சர்பைரைஸ் கொடுக்கும் விதமாகவும் ஒரு முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM