ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வியா? ரசிகர்கள் அதிர்ச்சி

0
49

மூன்றாவது ஒரு நாள் போட்டியில் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணி பரிதாப தோல்வியை சந்தித்தது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடரை பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஒரு நாள் தொடரில், முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் டிரா ஆனது. இதன் மூலம் மூன்று போட்டிகளை கொண்ட தொடரில், 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணிமுன்னிலையில் இருந்தது.

இதற்கிடையில், மூன்றாவது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டி இன்று காலை கிறிஸ்ட்சர்ச் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. வானிலை சாதகமாக இருந்த நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸ், இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். வழக்கம் போல துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். 22 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த கில் ஆடம் மில் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிதானமாக ஆடிய ஷிகர் தவான் 45 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 219 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்நிலையில், நியூசிலாந்து அணி 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கியது. இதில், துவக்க ஆட்டக்காரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவன் கான்வாய் ஆகியோர் அதிரடியாக ஆடினர். இவர்கள் 54 பந்தில் 57 ரன்கள் 54 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி 18 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி, 104 ரன்களை குவித்திருந்தது. மழையின் காரணமாக ஆட்டம் தடை பட்டது. சிறிது நேரம் கழித்தும் மழை விடாததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here