பேருந்து கட்டணம் உயர்வா? போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த விளக்கம்..!

0
54

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், பேருந்து கட்டணமும் உயர்த்தபடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் அரசிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் பேருந்து கட்டணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தற்பொழுது, போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அந்த நஷ்டத்திலிருந்து துறையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை உயர்த்தமாட்டார் என ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். மேலும், சட்டப்பேரவையில் அறிவித்தபடி 1,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த நடைமுறை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். பேருந்து கட்டணம் எந்த ஒரு சுழலிலும் உயர்த்தப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here