என்னது இவரும் இனி டைரக்டராக போறாரா..? அவரே சொன்ன அந்த பதில்!!

விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகர். இவர் 2011 ஆம் ஆண்டில் ‘நுவ்விலா’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு, 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இவருக்கு சிறந்த நடிகருக்கான ‘ பிலிம்பேர் விருது – தெலுங்கு ‘ உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் பிரபலமான விஜய் தேவர்கொண்டாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.

Is he going to be a director The answer he said read it

இவர் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள குஷி திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது. தமிழில் நோட்டா படத்தில் நடித்துள்ள இவர், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதன்படி, “தனக்கு டைரக்டர் ஆக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது, சிறிது காலம் நடிப்பதை நிறுத்திவிட்டு ஒரு படத்தை இயக்கவேண்டும் என அவர் தனது ஆசையை தெரிவித்தார். இளம் வயதில் நடிகனாக முடிந்தவரை நடிப்பேன் அதன் பிறகு நிச்சயமாக இயக்குனராவேன் என்றும் கூறினார்.

Also Read : ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டன்..’ 200 ரூபாய்க்கு வித்த தக்காளி இப்ப 10 ரூபாய் தானாம்..!

ஹாலிவுட்டில் கிளாடியேட்டர், தெலுங்கில் போக்கிரி ஆகிய படங்கள் இவருக்கு மிகவும் பிடித்தது என்றார். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எப்போது வருகிறதோ அப்போது நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என்றும் வரகூடிய மனைவி திறமையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்”.