தோனியின் முதல் படம் எல்.ஜி.எம் சூப்பரா? சுமாரா? இதோ முழு விமர்சனம்…!

Today Cinema News 2023

இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவருடைய மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இதன் மூலமாக தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா , யோகி பாபு, ஆர்ஜே விஜய் உட்படப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குவதோடு மட்டுமல்லாமல் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கும், இவானாவுக்கும் காதல் ஏற்ப்படுகிறது. திருமணத்திற்கு பின்பு மாமியார் நதியாவுடன் வசிக்க பிடிக்கவில்லை. இதனால் ஒரு ஐடியாவை சொல்லுகிறார் இவானா. நான் மாமியாருடன் பழகி பார்த்து தான் திருமணத்திற்கு சம்மதம் சொல்லுவேன் என்கிறார். அதனால் ஹரிஷ் கல்யாண் அம்மா நதியாவை கோவா ட்ரிப்புக்கு அழைத்துச் செல்கிறார். அதன் பிறகு இவானாவும், அம்மா (நதியாவும்) எப்படி ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் கதை.

இதில் யோகிபாபு, ஆர்.ஜே.விஜய் நன்றாக சிரிக்க வைக்கிறார்கள். புலியுடன் சண்டை போடுவது தான் காமெடியாக இருக்கிறது. மேலும் காதல் நிறைவேறாத கோபம் மற்றும் காதலி விருப்பத்தை நிறைவேற்ற அவர் எடுக்கும் முயற்சிகள், நண்பர்களுடன் லூட்டி என பன்முக நடிப்பால் ஹரிஷ் கல்யாண் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகியோர் அவரவர் வேடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதில் பயணத்தை மையமாக கொண்ட படத்தால் அவர்கள் செல்லும் இடங்களை நம்மால் பார்த்து ரசிக்க முடியவில்லை. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். இருந்தாலும், வருங்கால கணவரின் அம்மாவுடன் பழக வேண்டும் என ஒரு பெண்ணின் மனநிலைமையை சற்று வித்தியாசமாக எடுத்துள்ளார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி.


LATEST POSTS IN VALAIYITHAL.COM