என்னது இனி மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் எண் கட்டாயமா? மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய விளக்கம்!!

இந்தியாவில் ஒரு தனி மனிதனின் முக்கிய அடையாள அட்டையாக பார்க்கப்படுவது ஆதார்டு கார்டு என்று சொன்னால் அது மிகையாகாது. வங்கி தொடர்பான புகார் மற்றும் ரேஷன் கார்டு தொடர்பான புகார் போன்ற பல்வேறு புகார்களை கட்டுப்படுத்த வங்கி எண்ணுடன் ஆதார் இணைப்பு மற்றும் ரேஷன் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும், மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு சலுகைகளை பெறவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தயை சிறப்புமிக்க ஆதார் எண் குறித்து தற்பொழுது ஒரு புகார் எழுந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் தேவைப்படுவதாக கூறுகின்றனர். ஆதார் எண் இல்லை என்றால் செயற்கை மற்றும் பிற சலுகைகள் மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Is Aadhaar number mandatory for my further admission read now

இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர், ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மறுக்கப்படக் கூடாது எனவும் ஆதார் எண் இல்லாத காரணத்தால் குழந்தைகள் பெற வேண்டிய சலுகைகள் மற்றும் உரிய பலன்கள் மறுக்கப்படக்கூடாது எனவும் மற்ற ஆவணங்களை அடிப்படையாக வைத்து பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM