போஸ்ட் ஆஃபிஸில் ஒவ்வொரு மாதமும் ஆர்டி கணக்கில் முதலீடு! 5.8% வட்டி விகிதத்தில், ரூ.5 லட்சத்துக்கு மேல் பெறலாம்!

0
97

ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.7,174 என ஒவ்வொரு மாதமும், ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) கணக்கில் முதலீடு செய்தால், ரூ.5 லட்சத்துக்கு மேலும், 5.8% வட்டி விகிதத்திலும் ஐந்து ஆண்டுகளின் முடிவில் உங்களுக்கு கிடைக்கும்.

  • பணத்திற்கான சிறந்த வட்டி விகிதம், ஆர்டி கணக்கில் முதலீடு செய்வதால் கிடைக்கும்.
  • உங்கள் கணக்கில் ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும், பணத்திற்கான வட்டி டெபாசிட் செய்யப்படும்.
  • நிறுவனமானது, நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு ஆர்டி திட்டத்தின் கீழ் 5.8% வட்டி விகிதத்தில் வழங்குகிறது.

எப்பொழுதுமே நாம் கடைபிடிக்க வேண்டிய ஒரு நல்ல பழக்கம் என்றால், அது சேமிப்பாக தான் இருக்க முடியும். சிறுக சிறுக சேமித்தால் தானே, அதை வைத்து பெரிய பயனை அடைய முடியும். இதை தான் சொல்லுவார்கள், ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்று…

நாம் சேமிக்கும் தொகையானது நமக்கு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீளவும், பாதுக்காப்பான நிலையிலும் இருக்க பெரிதும் உதவுவதால், நாம் சேமிக்கும் தொகை மட்டும் தான் நமக்கானதாக இருக்கும். இது போலவே, நாம் முதலீட்டு திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடாக செய்யும் பொழுதும், சில காலம் கழித்து முதலீட்டு தொகையுடன் அதற்கான வட்டியும் சேர்ந்து சற்று பெரிய தொகையாக கிடைக்கும்.

நாம் எந்த ஒரு தருணத்திலும் முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், முதலீடு செய்யக்கூடிய நிறுவனமோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அது பாதுகாப்பானதா? சரியானதா? என்பதை எல்லாம் ஆராய்ந்தப் பின்னரே, நாம் முதலீடு செய்ய வேண்டும். ஒரு சிலர் புத்திசாலித்தனமாக நினைத்துக் கொண்டு பங்கு சந்தைகளில் முதலீடு செய்வார்கள்.

இது நமக்கு எதிர்ப்பார்த்த தொகையை அதன் ஏற்ற இறக்கத்தால் கொடுத்துவிடும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. இதனால், நமக்கு கிடைக்கும் தொகையில் சிக்கல்களும் ஏற்படக் கூடும். இவையனைத்தும் தனியாரை சார்த்து வருவதால் தான், நமக்கு முழு நம்பிக்கையுடன் பணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது.

இதுவே அரசின் கீழ் இயங்கி வரக்கூடிய போஸ்ட் ஆஃபிசின் பல்வேறு வகையான திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் பொழுது, நமக்கு எந்த ஒரு பயமோ அல்லது லாபமின்மையோ அல்லது பாதுகாப்பின்மையோ ஏற்பட எந்தவொரு வாய்ப்புமே கிடையாது. இது முழுக்க முழுக்க அரசின் கட்டுபாட்டில் மட்டுமே செயல்படுவதால், நம்பிக்கையானதாக இருக்கிறது.

நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கான சிறந்த வட்டியினை போஸ்ட் ஆஃபீசின் ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) கணக்கில் செய்வதால், நமது பணத்திற்கான சிறந்த வட்டி என்பது சாத்தியமாகிறது. இந்த கணக்கில் டெபாசிட்டாக உங்களின் முதலீடு, குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். இதற்கு எந்த தொகை வரம்பும் கிடையாது.

5 ஆண்டுகள் வரையிலுமே, இந்த கணக்கின் காலம் நீடிக்கும். நம்முடைய வசதிக்கு ஏற்ப 6 மாதங்கள், 1 வருடம், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் என்று தொடர் வைப்புக்கான கணக்கு வசதியையும் வங்கி நமக்கு வழங்குகிறது. மேலும், ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும், முதலீட்டு திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்துள்ள பணத்திற்கான வட்டியானது, உங்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுவிடும்.

நீங்கள் இந்த ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) திட்டத்தின் கீழ் நிறுவனமானது, 5.8% வட்டி விகிதத்தில் போஸ்ட் ஆஃபிஸில் முதலீடு செய்யக்கூடிய பணத்திற்கு வழங்குகிறது. போஸ்ட் ஆஃபிஸில் ரூ.7,174 என ஒவ்வொரு மாதமும், இந்த ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) கணக்கில் முதலீடு செய்வதால்

5.8% வட்டி விகிதத்தில் ரூ.5 லட்சத்துக்கு மேல் தொகையானது, ஐந்து ஆண்டுகளின் முடிவில் உங்களுக்கு லிடைக்கும். ஒவ்வொரு காலாண்டிலும் இந்திய அரசு, அதன் அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களையும் நிர்ணயிக்கிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here