இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா! கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Today News Paper 2023

இந்தியாவின் 77ஆவது சுதந்திர தின விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடபடுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பாக பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு சுதந்திர தின உரையாடலை தொடங்கினார். அந்த விழாவில் பேசிய முதலவர், தேசிய கொடியை நான் ஏற்றும் வாய்ப்பை கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி என தெரிவித்தார். அதனையடுத்து, பல்வேறு துறையில் இருக்கும் சாதனையாளர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி அவர்களை கவுரவித்தார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM