இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்ல (IOB) அட்டெண்டர், ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை காலியா இருக்கு! மயிலாடுதுறையில தான் வேலையாம்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் பணிபுரிவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. அலுவலக உதவியாளர் மற்றும் அட்டெண்டர் பணியில் மொத்தம் மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜனவரி 12, 2024 முடிவதற்குள் ஆப்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கல்வித்தகுதி :

  • Office Assistant: Graduation
  • Attender: 10th

சம்பளம் :

  • Office Assistant: Rs.12,000/-
  • Attender: Rs.8,000/-

ALSO READ : ஜனவரி 15 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்க டைம் இருக்கு அண்ணா பல்கலைக்கழக வேலைக்கு..!

வயது வரம்பு :

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி விண்ணப்பதாரர் 01-01-2024 தேதியின்படி குறைந்த பட்ச வயது 22 மற்றும் அதிகபட்ச 40 வயதுடையவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டனமாக ரூ.200 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

Office Assistant, Attender வேலைக்கு எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழே குறிப்பிட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி :

The Director, RSETI, IOB,

Mayiladuthurai Main Branch,

80A, Pattamangalam Street,

Mayiladuthurai-609001.

மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் Official Notification மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

Indian Overseas Bank Attender, Office Assistant Job Vacancy work in Mayiladuthurai

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top