இந்திய – வங்கதேச அணி இன்று மோதல்! பதிலடி கொடுக்குமா இந்தியா?

0
49

வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் – 05) நடந்த முதலாவது ஒரு போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், டிசம்பர் 7 ஆம் தேதி ( இன்று) காலை 11.30 மணியளவில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 2-வது ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளனர். இதில் டாஸ்க் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மேலும், கடந்த ஆட்டத்தில் இந்திய அணியில் சிறந்த பந்து வீச்சாளர்கள் இருந்தும் போட்டியில் தோல்வி அடைந்தனர். இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே வங்கதேச அணிக்கு ஈடுகட்ட முடியும். இந்திய அணியில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஆல்-ரவுண்டரான அக்சர் படேல் இந்த 2-வது ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சொந்த மண்ணில் ஆட்டமிழக்காமல் இருக்க வங்கதேச அணியும் தீவிரம்காட்டி வருகின்றனர்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here