சுதந்திர தின விழா : தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் நாளை(ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி நாளை கொடியேற்ற உள்ளார். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையில் உள்ள கோட்டையிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேசிய கோடியை ஏற்றவுள்ளார். இந்நிலையில், இந்த விழாவினை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெள்யிட்டுள்ள அறிவிப்பில் “ பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM