சுதந்திர தின விழா : ஜியோ வெளியிட்ட அட்டகாசமான ஆஃபர்!

முன்னதாக ஏர்செல், வோடபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால், தற்பொழுது உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானிக்கு சொந்தமான ஜியோ என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் தான் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த ஜியோ நிறுவனம் மலை பிரதேசங்கள், காடுகள் என நாட்டில் எந்த இடத்திலும் நெட்வொர்க்கை வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஜியோ நிறுவனமானது 5G இணையத்தை நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் வழங்கி வருகிறது. இதே போல் நடப்பாண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் 5G சேவையை அளிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.அதுமட்டுமல்லாமல், ஜியோ நிறுவனம் பண்டிகை காலங்கள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்புது ஆஃபர்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில், வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜியோ நிறுவனம் தற்பொழுது புதிய ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ரூபாய் 2999 கட்டணமாக செலுத்தி 2.50 GB டேட்டாவை தினமும் பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதனுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் பல்வேறு OTT தளங்களுக்கான அணுகல் வசதியும் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM