இந்த ஆண்டு தொடக்கம் முதலிலேயே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து நல்ல முறையில் வந்து கொண்டிருந்தது. அந்த வகையில், கடந்த ஒரு வார காலமாக குறைந்திருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தற்பொழுது வடகிழக்கு பருவமழை காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது 15 ஆயிரம் கன அடிக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்துநேற்று காலை 10 ஆயிரத்து 600 கன அடியாக இந்த நீர்வரத்து மாலையில் 15 ஆயிரத்து 600 கன அடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஜூலை மாதம் பெய்த கனமழை காரணமாக ஜூலை மாதம் மேட்டூர் ஆணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது முறையாக தற்பொழுது மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து 10 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பபதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
RECENT POSTS-ன் வலையிதழ்
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023