புதிய உச்சம் தொட்ட வருமான வரி தாக்கல்… எத்தனை கோடி மக்கள் தெரியுமா?

உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வருமானம் மற்றும் சேமிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அதிக சம்பளம் தரும் நிறுவனத்தை தேடி செல்கின்றனர். ஆனால், அதிக சம்பளம் மற்றும் வருமானத்தை ஈட்டுபவர்களுக்கும் ஒரு ரூல்ஸ் உள்ளது. அதுதான் வருமான வரி கணக்கு. அதாவது ஒரு ஆண்டிற்குள் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் அல்லது வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி கணக்கை செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி செலுத்த வேண்டும்.

அந்த வகையில், 2022-23 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, 6 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வருமான வரியை தாக்கல் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஆறரை கோடி பேர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 36 லட்சத்து 91 ஆயிரம் பேர் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் ரூ.1000 அபராதம் செலுத்தி வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Income tax filing reached a new peak dont miss and read it

LATEST POSTS IN VALAIYITHAL.COM