மகளிர் தின விழாவை பற்றிய முக்கிய தகவல்? மாவட்ட கலெக்டர் உத்தரவு!

0
57
Important Information about Women's Day Celebration District Collector order-Eligible Candidates Can Apply For Avvaiyar Award

வருடந்தோறும் மார்ச் மாதம் நடைபெறும் மகளிர் தின விழாவில் ஔவையார் விருது வழங்குவது வழக்கம். அதே போல் அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்தில் நடைபெறும் மகளிர் தின விழாவுக்கு ஔவையார் விருது வழங்குவதற்கு தகுதியான பெண்ககள் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஔவையார் விருது தமிழ்நாடு சமூக நல துறையின் சார்பில் வழங்கப்படும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் பெண்கள், கட்டாயம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதுமட்டுமள்ளம்ல் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

இதனை தொடர்ந்து, மகளிர் தினத்தன்று வழங்கப்படும் இந்த ஔவையார் விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் புகைப்படம், சேவை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கையுடன் கருத்துருவினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து அதன் 2 நகல் மற்றும் சமூக பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை பெற்று கொண்டு https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இந்த விண்ணப்பங்கள் 10.12.2022 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here