ரேசன் கார்டு பற்றிய முக்கிய தகவல்…!

0
83

கடந்த சில மாதங்களாக ரேஷன் கார்டுதாரர்களை சரிபார்க்கும் பணி அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணியை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு இந்த சரிபார்ப்பின் போது தகுதியில்லாத பயனாளிகளின் ரேஷன் கார்டை ரத்து செய்யவும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கவும் விதிமுறைகள் போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த ரேசன் கார்டு சரிபார்க்கும் பணியில் தகுதி இல்லாத ரேசன் கார்டுகளை ரத்து செய்ய போவதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில், நாட்டில் சுமார் 10 லட்சம் பேர் இலவச ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி மோசடி செய்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இவர்களின் பட்டியலும் துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது. இனி இவர்கள் அனைவரின் ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, வருமான வரி செலுத்துபவர்கள் அல்லது 10 பிகாக்களுக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் இலவச ரேஷனை பெற்று வணிகம் செய்யும் பல கார்டுதாரர்கள் உள்ள நிலையில் அவர்களின் கார்டுகளும் ரத்து செய்யப்படும். ரத்து செய்யப்படும் ரேசன் கார்டுகள் மாவட்டத் தலைமையகத்துக்கு அனுப்படும். அதன்பிறகு அவர்களுக்கு ரேசன் கடையிலிருந்து எந்த வகையான பொருளும் விநியோகிக்கப்படாது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here